என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஐஎஸ்எல் கால்பந்து
நீங்கள் தேடியது "ஐஎஸ்எல் கால்பந்து"
ஐ.எஸ்.எல். காலபந்து தொடரில் சென்னையின் எப்.சி. அணி தனது முதல் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 4-ம் இடம் பெற்றுள்ளது.
கோவா:
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், ஐதராபாத் எப்.சி அணியும் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 66-வது நிமிடத்தில் சென்னை அணி வீரரான விளாடிமிர் கோமர் ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப் படுத்தினார். அதன்பின், ஐதராபாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில், சென்னை அணி 1-0 என்ற கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தியது.
கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த காத்து இருக்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.6 கோடியையும், 2-வது இடத்தை பெறும் அணி ரூ.3 கோடியையும் பரிசாக பெறும்.
கோவா:
8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.
இந்திய வீரர்களுடன், வெளிநாட்டினரும் இணைந்து விளையாடும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, 3 முறை சாம்பியனான ஏ.டி.கே.மோகன் பகான், 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., பெங்களூரு, கோவா, கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஒடிசா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர் ஆகிய 11 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த முறை போட்டியில் களம் காணும் வெளிநாட்டு வீரர்களுக்கான விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஒரு போட்டியில் 5 வெளிநாட்டு வீரர்கள் களம் இறங்க முடியும். தற்போது 3 வெளிநாட்டு வீரர்கள், ஒரு ஆசிய வீரர் என மொத்தம் 4 பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த சீசனுக்காக ஒவ்வொரு அணியும் முந்தைய வீரர்களில் பலரை கழற்றி விட்டதுடன் பல புதிய வரவுகளை சேர்த்து தங்களது வலிமையை அதிகரித்து இருக்கின்றன. சென்னையின் எப்.சி. அணி நடுகள வீரர் அனிருத் தபா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. அணியின் புதிய பயிற்சியாளராக பேசிதார் பாண்டோவிச் பொறுப்பேற்றுள்ளார். கோப்பையை வெல்லும் முனைப்பில் எல்லா அணிகளும் கடந்த சில வாரங்களாக தீவிர பயிற்சியின் மூலம் தங்களது திறமையை பட்டை தீட்டி இருக்கின்றன.
தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொள்கிறது. சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 23-ந் தேதி ஐதராபாத்தை சந்திக்கிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
கால்பந்து ரசிகர்களை குஷிப்படுத்த காத்து இருக்கும் இந்த போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி ரூ.6 கோடியையும், 2-வது இடத்தை பெறும் அணி ரூ.3 கோடியையும் பரிசாக பெறும். அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகளுக்கு தலா ரூ.1½ கோடி கிடைக்கும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3½ கோடி பரிசாக கிட்டும். லீக் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணியே கோப்பையையும் வென்றால் மொத்தம் ரூ.9½ கோடியை பரிசாக அள்ளும்.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடியது. #ISL2018 #BengalureFC #FCGoa
மும்பை:
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையில் அரங்கேறியது. இதில் மகுடத்துக்கான பெங்களூரு எப்.சி.- எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். ஆனால் வழக்கமான 90 நிமிடங்களில் யாரும் கோல் போடவில்லை. 81-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு அடித்த அருமையான ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது.
இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இரண்டு அணி வீரர்களும் தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடினர். அவ்வப்போது உரசலும் ஏற்பட்டது. 105-வது நிமிடத்தில் 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற கோவா வீரர் அகமது ஜாஹோ வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அந்த அணி 10 வீரர்களுடன் ஆடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
இந்த பரபரப்பான சூழலில் 116-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டது. ‘கார்னர்’ பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை பெங்களூரு வீரர் ராகுல் பெகே தலையில் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து கோவா கோல் கீப்பர் நவீன்குமாரின் கையில் பட்டு வலைக்குள் தெறித்து விழுந்தது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து முதல்முறையாக கோப்பையை சொந்தமாக்கியது. அதே சமயம் கோவா அணி 2-வது முறையாக இறுதி சுற்றில் தோற்று இருக்கிறது. ஏற்கனவே 2015-ம் ஆண்டிலும் தோல்வி கண்டு இருந்தது. வாகை சூடிய பெங்களூரு அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவா அணி வீரரான ஸ்பெயினைச்சேர்ந்த பெர்ரான் கோரோமினாஸ் (16 கோல்) தங்க காலணி மற்றும் தங்கப்பந்து விருதை பெற்றார். சிறந்த கோல் கீப்பர் விருதுக்கு பெங்களூரு வீரர் குர்பிரீத் சிங் சந்து தேர்வு செய்யப்பட்டார்.
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் இறுதிப்போட்டி நேற்றிரவு மும்பையில் அரங்கேறியது. இதில் மகுடத்துக்கான பெங்களூரு எப்.சி.- எப்.சி. கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் நிமிடத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். ஆனால் வழக்கமான 90 நிமிடங்களில் யாரும் கோல் போடவில்லை. 81-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு அடித்த அருமையான ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது.
இந்த பரபரப்பான சூழலில் 116-வது நிமிடத்தில் பெங்களூரு அணி கோல் போட்டது. ‘கார்னர்’ பகுதியில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை பெங்களூரு வீரர் ராகுல் பெகே தலையில் முட்டி வலையை நோக்கி திருப்பினார். பந்து கோவா கோல் கீப்பர் நவீன்குமாரின் கையில் பட்டு வலைக்குள் தெறித்து விழுந்தது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. முடிவில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை தோற்கடித்து முதல்முறையாக கோப்பையை சொந்தமாக்கியது. அதே சமயம் கோவா அணி 2-வது முறையாக இறுதி சுற்றில் தோற்று இருக்கிறது. ஏற்கனவே 2015-ம் ஆண்டிலும் தோல்வி கண்டு இருந்தது. வாகை சூடிய பெங்களூரு அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவா அணி வீரரான ஸ்பெயினைச்சேர்ந்த பெர்ரான் கோரோமினாஸ் (16 கோல்) தங்க காலணி மற்றும் தங்கப்பந்து விருதை பெற்றார். சிறந்த கோல் கீப்பர் விருதுக்கு பெங்களூரு வீரர் குர்பிரீத் சிங் சந்து தேர்வு செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC
சென்னை:
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 58-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி.யை சந்தித்தது. 16-வது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணி முதல் கோல் அடித்தது.
அந்த அணி வீரர் டேனியல் இந்த கோலை அடித்தார். 38-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சென்னை அணி வீரர் ரபெல் அகஸ்டா பதில் கோல் திருப்பினார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. பிற் பாதியின் கடைசி கட்டத்தில் டெல்லி அணி அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு அதிர்ச்சி அளித்தது. அந்த அணி வீரர்கள் பிக்ரம்ஜித் சிங் 78-வது நிமிடத்திலும், நந்தகுமார் சேகர் 82-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அதன் பிறகு சென்னை அணி கோல் அடிக்க போராடினாலும் அதற்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் டெல்லி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதலாவது வெற்றியை ருசித்தது.
12-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி ஏற்கனவே 4 டிராவும், 7 தோல்வியும் கண்டு இருந்தது. 12-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும். இவ்விரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதுகின்றன. #ISL2018 #DelhiDynamos #ChennaiyinFC

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity
மும்பை:
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, மும்பை சிட்டியுடன் மோதியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக ஆடிய மும்பை அணி வீரர்களில் 27-வது நிமிடத்தில் ராய்னியர் பெர்னாண்டஸ், 55-வது நிமிடத்தில் மோடோ சோகோவ் ஆகியோர் கோல் அடித்தனர். பந்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் (53 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் (14 முறை) சென்னை அணி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்திய போதிலும், எதிரணியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை.
முடிவில் மும்பை சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை தோற்கடித்தது. இதன் மூலம் மும்பை அணி 20 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. அதே சமயம் ஒரு வெற்றி, 2 டிரா, 8 தோல்வி என்று வெறும் 5 புள்ளி மட்டுமே எடுத்து சொதப்பியுள்ள சென்னை அணிக்கு, அரைஇறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. இன்றைய ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன. #ISL2018 #ChennaiyinFC #MumbaiCity

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வி அடைந்தது. #ISL2018 #ChennaiyinFC #ATK
சென்னை:
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவுடன் மல்லுகட்டியது.
விறுவிறுப்பான இந்த மோதலில் 14-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜெயேஷ் ரனே நீண்ட தூரத்தில் இருந்து சூப்பராக கோல் அடித்தார். 24-வது நிமிடத்தில் சென்னை வீரர் தோய்சிங் கோல் திருப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். 44-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஹிதேஷ் ஷர்மா அருகில் வந்து இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை, சென்னை வீரர் சபியா பந்தை கையால் தடுத்து விட்டார். இதனால் வழங்கப்பட்ட பெனால்டியை கொல்கத்தா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மானுல் லான்ஜரோட் கோலாக்கினார்.
பிற்பாதியில் சென்னை வீரர்கள் வேகத்தை தீவிரப்படுத்தினர். சென்னை வீரர்கள் பக்கமே பந்து கொஞ்சம் அதிகமாக (53 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. இந்த சூழலில் 80-வது நிமிடத்தில் கோல்பகுதியில் வைத்து பந்தை தடுக்க சென்னை வீரர்களில் சிலர் ஒருசேர முயற்சித்த போது, அந்த குழப்பத்திற்கு இடையே பந்து கார்லஸ் சலோமின் கையில் பட்டு விட்டது. இதனால் மறுபடியும் கொல்கத்தா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த பெனால்டியையும் லான்ஜரோட் கோலாக மாற்றினார். இதன் பின்னர் 88-வது நிமிடத்தில் சென்னை வீரர் இசாக் வன்மல்சவ்மா அடித்த கோல் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.
முடிவில் சென்னை அணி 2-3 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது. தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சென்னை அணி 10 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 7 தோல்வி என்று 5 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது. உள்ளூரில் இந்த சீசனில் இதுவரை சென்னை அணி வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இன்றைய ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. #ISL2018 #ChennaiyinFC #ATK

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. #ISL2018 #ChennaiFC #KeralaBlaster
சென்னை:
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 43-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணியினர் 14 முறை எதிரணியின் கோல் எல்லையை நோக்கி ஷாட் அடித்த போதிலும் அது ஏமாற்றத்திலேயே முடிந்தது. கோல் அடிக்க கிடைத்த பல நல்ல வாய்ப்புகளில், சென்னை அணியினர் அவசர கோலத்தில் செயல்பட்டு பந்தை கோல் கம்பத்துக்கு வெளியில் அடித்து வீணடித்தனர். முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்த சீசனில் கோலின்றி டிரா ஆன 4-வது ஆட்டம் இதுவாகும்.
உள்ளூரில் 4-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி இந்த சீசனில் சொந்த மண்ணில் வெற்றி கணக்கை தொடங்காத சோகம் தொடருகிறது. மொத்தத்தில் சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வி கண்டுள்ளது. இதனால் சென்னை அணி அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறுவது சிக்கலாகி இருக்கிறது. 9-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி ஒரு வெற்றி, 5 டிரா, 3 தோல்வியை பெற்றுள்ளது.
பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன. #ISL2018 #ChennaiFC #KeralaBlaster

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி அணி நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. #ISL2018 #MumbaiCity #NorthEastUnited
கவுகாத்தி:
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கவுகாத்தியில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்தது. வெற்றிக்குரிய கோலை 4-வது நிமிடத்தில் அர்னால்டு இசோகோ அடித்தார். கவுகாத்தி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி 3 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா- எப்.சி. புனே சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. #ISL2018 #MumbaiCity #NorthEastUnited

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. #ISL2018 #FCGoa #DelhiDynamos
கோவா:
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 31-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை தோற்கடித்தது. ஒரு கட்டத்தில் கோவா அணி 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில் பிரான்டன் பெர்னாண்டஸ் (82-வது நிமிடம்), எடு பெடியா (89-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர்.
கோவா அணி 4 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. டெல்லி அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் புனேவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னையின் எப்.சி. அணி. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி மற்றும் எப்.சி புனே சிட்டி அணிகள் மோதின.
ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் புனே அணியை சேர்ந்த ஆஷ் குர்னியன் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை அணியை சேர்ந்த மாலிசன் ஆல்வ்ஸ் 54-வது நிமிடத்திலும், கிரிகோரி நெல்சன் 56-வது நிமிடத்திலும், இனிகோ கால்டெரின் 69-வது நிமிடத்திலும், தோய் சிங் 72வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தனர்.
ஆட்டத்தின் இறுதியில் புனே அணியை சேர்ந்த ஜோனாதன் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம், சென்னையின் எப்.சி அணி 4- 2 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. #ISL2018 #FCPuneCity #ChennaiyinFC
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டரை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப்.சி. அணி வெற்றி பெற்றது. #ISL2018 #BengaluruFC #KeralaBlasters
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த சுனில் சேத்ரி முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சேர்ந்த ஸ்லாவியா ஸ்டோஜனோவிக் 30வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1 - 1 என்ற கணக்கில் சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 80-வது நிமிடத்தில் பெங்களூரு அணியை சேர்ந்த நிகோலா கிரெம்விரிக் ஒரு கோல் அடித்தார். இதனால் பெங்களூரு அணி 2- 1 என முன்னிலை பெற்றது.
இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு எப் சி அணி வெற்றி பெற்றது.
பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றி என்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துள்ளது. #ISL2018 #BengaluruFC #KeralaBlasters
டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகளுக்கு எதிரான போட்டி சமனில் முடிந்தது. #ISL2018 #DelhiDynamos #JamshedpurFC
புதுடெல்லி:
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதின.
ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த செர்ஜியோ சிடோன்சா முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதையடுத்து, முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இதேபோல், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், டெல்லி அணியின் லாலியன்ஜுவாலா சாங்கே 55-வது நிடத்திலும், அட்னா கமோனா 58-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினர்.
இதற்கு பதிலடியாக, ஜாம்ஷெட்பூர் அணியின் ஜோஸ் லூயிஸ் 72வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், டெல்லி டைனமோஸ் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது. இந்த ஆட்டத்தின் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி புள்ளிப் பட்டியலில் ஜாம்ஷெட்பூர் அணி முதலிடம் பிடித்துள்ளது. #ISL2018 #DelhiDynamos #JamshedpurF
×

X